தமிழகம்

கழுத்தை நெரித்த கடன் தொல்லையால் சோகம்.. கணவனின் முடிவால் கண்ணீரில் மனைவி, குழந்தை.!

Summary:

கழுத்தை நெரித்த கடன் தொல்லையால் சோகம்.. கணவனின் முடிவால் கண்ணீரில் மனைவி, குழந்தை.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், குலசேகரம் வெண்டலிகோடு கிராமத்தை சேர்ந்தவர் சதானந்தன். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளையமகன் தினேஷ் குமார் (வயது 43). இவரின் மனைவி ஸ்ரீ நித்யா (வயது 34). 

தினேஷ் குமார் - ஸ்ரீ நித்யா தம்பதிகளுக்கு 5 வயதுடைய மகன் இருக்கிறார். தினேஷ் குமார் பால் வெட்டும் தொழில் செய்து வந்த நிலையில், சிலரிடம் குடும்பத்திற்காக கடன் வாங்கியதாக தெரியவருகிறது. கடனை அடைக்க இயலாமல் அவதிப்பட்ட தினேஷ் குமார், இடைக்கட்டான்கால் பகுதியில் உள்ள தோட்டத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார். 

ஆனால், அந்த இடம் தனியார் காடு அருகே அமைந்துள்ளதால், அதனை விற்பனை செய்ய இயலாமல் போயுள்ளது. இதனால் மனவேதனையில் தவித்து வந்த தினேஷ் குமார், வருத்தத்துடன் காணப்பட்டு வந்துள்ளார். ஸ்ரீ நித்யாவும் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார். 

இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த தினேஷ் குமார், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று காலை தினேஷின் தந்தை அவருக்கு டீ கொடுக்க வீட்டிற்கு சென்றபோது விஷயம் தெரியவந்துள்ளது. 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சதானந்தன் குலசேகரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தினேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement