
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. டிக் டாக் புகழ் குமரி இளைஞருக்கு காவல்துறை வலைவீச்சு.! குடும்பத்துடன் தலைமறைவு.!!
மைலோடு அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 19 வயது இளைஞர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மைலோடு கிராமத்தை சேர்ந்தவர் ரீஜன் (வயது 19). இவர் நாகர்கோவில் அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2 ஆம் வருடம் பயின்று வந்துள்ளார். இவரின் சகோதரியும் மற்றொரு கல்லூரியில் பயின்று வருகிறார்.
கல்லூரியில் பயின்று வரும் சகோதரி, துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு டியூசன் நடத்தி வருகிறார். அவரிடம் கிராமத்தை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் பயின்று வந்துள்ளனர். இந்த டியூஷனில் கூலித்தொழிலாளியின் மகளான 6 வயது மற்றும் 4 வயது சிறுமியும் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், ரீஜன் 6 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக சிறுமி தாயாரிடம் தெரிவிக்கவே, அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் ரீஜனின் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவே, இந்த தகவலை அறிந்த குடும்பத்தினர் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளனர். அவர்களுக்கு காவல் துறையினர் வலைவீசியுள்ளனர். ரீஜன் டிக் டாக் செயலியில் பிரபலமான நபராக சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement