தமிழகமே அதிர்ச்சி.. முக்கிய அரசியல் கட்சி பிரமுகர், ஓடஓட வெட்டிக்கொலை.!

தமிழகமே அதிர்ச்சி.. முக்கிய அரசியல் கட்சி பிரமுகர், ஓடஓட வெட்டிக்கொலை.!


Kanyakumari Colachel DMK Supporter Murder by Strangers

குளச்சல் அருகே திமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், மர்ம கும்பலுக்கு காவல்துறையினர் வலைவீசி உள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் குமார் சங்கர். இவர் ரீத்தாபுரம் பேரூர் திமுக கிளைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று இரவு சுமார் 8 மணியளவில் வேலைக்கு சென்றுவிட்டு குமார் சங்கர் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், இவர் வரும் வழியில் முன்னதாகவே பதுங்கியிருந்த மர்ம கும்பல், அவரை இடைமறித்து அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டி தாக்கியுள்ளது. 

tamilnadu

பின்னர், குமார் சங்கர் உயிரிழந்ததை உறுதி செய்து, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்த சம்பவத்தில், குமார் சங்கர் பலத்த வெட்டுக் காயத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததால், சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் மிதந்து பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலையாளிகளை தேடி வருகின்றனர். கொலையாளிகள் கைதானதற்கு பின்னரே, எதற்காக? யாரால்? கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரியவரும்.