அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
இனிப்பில் கஞ்சா கலந்து பள்ளி மாணவர்களுக்கு சப்ளை.. தட்டித்தூக்கிய போலீசார்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பீளமேடு பகுதியில் இருந்து கஞ்சா பொட்டலங்களை எடுத்து செல்வதாக எலவனசூர்கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து எம்ஜிஆர் சிலை அருகே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் போலீசாரை பார்த்ததும் நிற்காமல் வேகமாக சென்றுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் விரட்டி சென்று காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில் கஞ்சாவை இனிப்பு பலகாரங்களில் கலந்து சேர்த்து பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், பீளமேடு கிராமத்தை சேர்ந்த ராஜா மற்றும் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த பாண்டியன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.