கஞ்சா விற்றவரை போலீசுக்கு தகவல் கொடுத்த நபர் வெட்டி படுகொலை!Kanja accused killed friend in Erode

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். லாரி ஓட்டுனரான விக்னேஷின், நண்பரான சசிகுமார் என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார்.

இதனையடுத்து கஞ்சா விற்றதே தொடர்பாக விக்னேஷ் ரகசியமாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த சசிகுமார் தனது நண்பர் விக்னேஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி விக்னேஷ் ஐ தனியாக அழைத்து சென்று அளவுக்கு அதிகமாக மது வாங்கி கொடுத்துள்ளார்.

erode

இதில், போதை தலைக்கேரியவுடன் அரிவாள் மற்றும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்துள்ளார். இதனையடுத்து விக்னேஷின் உடலை புதைத்து விட்டு தலைமறைவாகியுள்ளார்.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சசிகுமார் மீது சந்தேகப்பட்டு விசாரணை நடத்தியதில் அவரே சரணடைந்ததுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.