அரசியல் தமிழகம்

எடப்பாடி தொகுதியில் மீண்டும் தமிழக முதலமைச்சர் பழனிசாமி போட்டியிட்டால் தோல்வி உறுதி.! கனிமொழி

Summary:

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் பழனிசாமி போட்டியிட்டால் தோல்வியை சந்திப்பார் என்று கனிமொழி தெரிவித்தார்.

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் எனும் தலைப்பில், தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளது திமுக. இந்தப் பிரச்சாரத்தை, தி.மு.க தலைவர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் துவக்குகின்றார்கள். அந்த வகையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியிலிருந்து நேற்று தனது பிரச்சாரத்தைத் துவங்கினார் தி.மு.க மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி.

எலாம் மாவட்டம் கொங்கணா புரத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடல், புதுப்பாளையத்தில் விவசாயிகள் சந்திப்பு, வனவாசியில் நெசவாளர் சந்திப்பு, இருப்பாளி பகுதியில் பனை தொழிலாளர்களுடன் சந்திப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் கனிமொழி.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் தமிழக முதலமைச்சர் பழனிசாமி போட்டியிட்டால் தோல்வியை சந்திப்பார் என்று தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் நிர்வாகிகள் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி இந்த சந்திப்பால் எந்தவித தாக்கமும் ஏற்படாது என்று தெரிவித்தார்.


Advertisement