தமிழகம்

ரவுடி படப்பை குணாவின் உறவினர் கைது.. விஜய் மக்கள் இயக்க நிர்வாகியாம்..!

Summary:

ரவுடி படப்பை குணாவின் உறவினர் கைது.. விஜய் மக்கள் இயக்க நிர்வாகியாம்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோலோச்சி வந்த ரவுடிகளின் அட்டகாசம் தற்போது குறைய தொடங்கி உள்ளது. ரவுடிகளின் அட்டகாசத்தை குறைக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

நேற்று முன்தினம் கூட நடந்த இரட்டை கொலை தொடர்பான விஷயத்தில், விசாரணைக்கு சென்ற காவல் அதிகாரிகளை கொலை செய்ய முயற்சித்ததாக 2 ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்டனர்‌. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள படப்பை பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வரும் குணா என்பவரின் உறவினர் திருநாவுக்கரசு என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் சுங்குவார்சத்திரம் காவல் உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு விஜய் மக்கள் இயக்கத்தில் பொறுப்பில் இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement