தனியார் நிறுவன ஊழியர்கள் சாப்பாட்டில் சுண்ணாம்புக்கல்; 10 பேருக்கு உடல்நலக்குறைவு.!

தனியார் நிறுவன ஊழியர்கள் சாப்பாட்டில் சுண்ணாம்புக்கல்; 10 பேருக்கு உடல்நலக்குறைவு.!


kanchipuram-oragadam-steel-strips-wheels-workers-food-i

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் சிப்காட்டில் பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இங்கு செயல்பட்டு வரும் கார் உதிரி பாகம் தயாரிக்கும் Steel Strips Wheels Limited என்ற தனியார் நிறுவனத்தில், 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். 

நேற்று இரவு நிறுவனத்தின் சார்பில் இரண்டாவது பணி நேரத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இரவு 8 மணிக்கு உணவு வழங்கப்பட்ட நிலையில், முதலில் சாப்பிட்ட பத்து பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. 

kanchipuram

இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 10 பேர் சாப்பிட்ட உணவில் சுண்ணாம்புக்கல் இருந்ததாகவும் கண்டறியப்பட்ட நிலையில், பிற தொழிலாளர்கள் இது குறித்து நிர்வாகத்தினரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். 

மேலும், தங்களால் மேற்படி வந்துள்ள உணவை சாப்பிட இயலாது என்று கூறவே, திடீர் போராட்ட சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, நிலைமையை உள்வாங்கி சுதாரித்த நிர்வாகத்தினர் 150 பேருக்கு வேறொரு உணவகத்தில் இருந்து உணவுகளை வரழைத்து கொடுத்தனர். மேலும், உணவு சப்ளை செய்யும் நிறுவனத்திடம் விசாரணை நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.