BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பணியில் இருந்த கட்டுமான தொழிலாளி கடும் வெப்பத்தால் உயிரிழப்பு: காஞ்சிபுரத்தில் சோகம்.!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கட்டுமான வேளையில், இன்று சச்சின் (வயது 25) என்ற வடமாநில தொழிலாளி ஈடுபடுத்தப்பட்டு இருந்தார்.
கடும் வெப்பத்தால் சோகம்:
அவர் பணியின்போது வெயிலின் தாக்கம் தாங்காமல் அவதிப்பட்ட நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சச்சின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், சச்சினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.