ஏழைப்பங்காளராக, எளிமையான முதலமைச்சராக, தேசிய தலைவராக திகழ்ந்த காமராஜரின் புகழை இன்று போற்றுவோம்!

ஏழைப்பங்காளராக, எளிமையான முதலமைச்சராக, தேசிய தலைவராக திகழ்ந்த காமராஜரின் புகழை இன்று போற்றுவோம்!


Kamarajar birthday

பாரத ரத்னா, தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 118-வது பிறந்தநாள்  இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அனைவரும் கல்வி பெறும் வகையில் தமிழகமெங்கும் அரசு பள்ளிக்கூடங்களை அதிகப்படுத்தி, பலரின் வாழ்வில் ஒளியேற்றிய  பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளில் அனைவரும் நினைவுகூர்வோம்.

ஏழைப்பங்காளராக, எளிமையான முதலமைச்சராக,  தேசிய  தலைவராக திகழ்ந்த காமராஜரின் புகழை எப்போதும் போற்றுவோம். படிக்காத  மேதை, கர்ம வீரர் என்று அன்போடு அழைக்கப்படும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாடும் இவ்வேளையில், அவரைப் பற்றி நினைவு கூர்வதை பெருமையாகக் கருதுகிறேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

kamarajar

பெருந்தலைவர் 118வது பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் பலரும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 

காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது. இன்றைய அவரது பிறந்த தினத்தன்று அவரை பெருமைபடுத்துவோம்.