ரூ. 3 கோடிப்பு.. சவுக்கு சங்கர் இன்வெஸ்டிகேட்.. பேரம் பேசிய சிறுமியின் குடும்பம்?.. கறாராக மறுத்த நிர்வாகம்..! அதிர்ச்சி உண்மை..!

ரூ. 3 கோடிப்பு.. சவுக்கு சங்கர் இன்வெஸ்டிகேட்.. பேரம் பேசிய சிறுமியின் குடும்பம்?.. கறாராக மறுத்த நிர்வாகம்..! அதிர்ச்சி உண்மை..!



kallakurichi-savuku-sankar-investigation-rs-3-crore

சின்னசேலம் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில், சிறுமியின் குடும்பத்தினர் - பள்ளி நிர்வாகம் இடையே ரூ.3 கோடி வரை பேச்சுவார்த்தை நடந்ததாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம், கனியாமூர் நகரில் செயல்பட்டு வரும் சக்தி இன்டர்நெஷனல் பள்ளியில் பயின்று வந்த கடலூர் மாவட்டம் வேப்பூர் பெரிய நெசமூர் 17 வயது சிறுமி, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில், அவரின் மரணத்தில் மர்மம் உள்ளதாக பெற்றோர் தரப்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு பிரேத பரிசோதனை மீண்டும் நடைபெற்றது. 

கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பின்னர் மாணவியின் உடலை பெற பெற்றோர்கள் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. வன்முறை தொடர்பாகவும், வழக்கு விசாரணை தொடர்பாகவும் நீதிமன்ற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று (ஜூலை 23) காலை மாணவியின் உடலை பெற கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு மாணவியின் பெற்றோர் வருகை தந்து மாணவியின் உடலை பெற்றுக்கொண்டனர். முன்னேற்பாடாக காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

இந்நிலையில், சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள வீடியோவில், "பள்ளி நிர்வாகத்திடம் பெண்ணின் குடும்பத்தினர் பணம் கேட்டு பேரம் பேசியுள்ளனர். முதற்கட்டமாக ரூ.8 இலட்சம் நிர்வாகம் சார்பில் தர சம்மதிக்கப்பட்டுள்ளது. மாணவியின் தரப்பில் ரூ.12 இலட்சம் கேட்கப்பட்டுள்ளது. இதற்குள்ளாக, மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்பதாக பல அமைப்புகள் கிளம்பியதால் பள்ளி நிர்வாத்திடம் இருந்து தொகை உயர்த்தப்பட்டு ரூ.3 கோடி வரை சென்றுள்ளது. 

பள்ளியின் தாளாளரோ நானே கடனின் இருக்கிறேன். என் மீது தவறில்லை. உங்களின் பிள்ளை தற்கொலை தான் செய்தது. நீங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்று விலகிவிடுகிறார். இதற்கு பின்னரே வன்முறை நடந்துள்ளது. மாணவி இறந்த 3 நாட்களில் சுவரொட்டி மற்றும் வாட்சப் பதிவுகள் வாண்டையார் இளைஞர்கள் சார்பாக பகிரப்படுகிறது. Tiger பிரபு என்ற இளைஞரால் அது பகிரப்படுகிறது. 

இவர் உள்ளூர் இளைஞர்களிடம் 17 ஆம் தேதி சுவரொட்டி மற்றும் போராட்டம் தொடர்பான தகவலை தெரிவித்து, விஜய் மாயத்தேவர் என்ற இளைஞர் மூலமாக அதனை நிறைவேற்றுகிறார். 17 ஆம் தேதி போராட்டத்திற்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பலரும் இவர்களின் சூழ்ச்சியால் நீதி கேட்பதாக வந்துவிடுகிறார்கள். டொனேஷன் கேட்டு செல்லும் அரசியல் கட்சி பிரமுகர்களை உட்கார கூட விடாமல் கண்டிப்புடன் பேசி அனுப்பி வைப்பார் என்று வி.சி.க பிரமுகர் தெரிவித்தார்" என்று சவுக்கு சங்கர் பேசியிருக்கிறார்.