தமிழகம்

19 வயது இளம் பெண்ணுடன் எம்.எல்.ஏ வுக்கு நடந்த திருமணம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

Summary:

எம்.எல்.ஏ பிரபுவுடன் செல்ல அவரது மனைவி சௌந்தர்யாவுக்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

எம்.எல்.ஏ பிரபுவுடன் செல்ல அவரது மனைவி சௌந்தர்யாவுக்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மிகவும் வைரலாக பேசப்பட்டுவரும் சம்பவங்களில் ஒன்று கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவின் திருமணம். எம்.எல்.ஏ பிரபு தனது மகளை கடத்திச்சென்று திருமணம் செய்ததாவும், தங்கள் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பெண்ணின் தந்தை ஸ்வாமிநாதன் புகார் தெரிவித்தார்.

மேலும் 19 வயது நிரம்பாத தமது மகளை மீட்டுத்தரவேண்டும் என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண்ணின் தந்தை மனு ஒன்றினை அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சௌந்தர்யாவை இன்று நீதி மன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜரான சௌந்தர்யா, தான் முழுமனத்துடன்தான் எம்.எல்.ஏ பிரபுவை திருமணம் செய்துகொண்டதாகவும், அவர் தன்னை கடைச்சென்று திருமணம் செய்யவும் எனவும் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். மேலும் தனது கணவர் எம்.எல்.ஏ பிரபுவுடன் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் சௌந்தர்யா அவரது கணவர் எம்.எல்.ஏ பிரபுவுடன் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.


Advertisement