பிக்பாஸ் நிகழ்ச்சியில் இது மட்டும் தான் இருக்கிறது.! கடுமையாக விமர்சித்த பிரபல நடிகை.!
இளம் பெண்ணுடன் எம்.எல்.ஏ வுக்கு திருமணம்! உண்மையில் என்ன நடந்துச்சு? மனைவியுடன் விளக்கமளித்த எம்.எல்.ஏ!
இளம் பெண்ணுடன் எம்.எல்.ஏ வுக்கு திருமணம்! உண்மையில் என்ன நடந்துச்சு? மனைவியுடன் விளக்கமளித்த எம்.எல்.ஏ!

கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு இன்று தனது காதலியை திருமணம் செய்த நிலையில் என்ன நடந்தது என்பது குறித்து தனது மனைவியுடன் விளக்கமளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு அவர்கள் இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்று திருமணம் செய்ததாக கூறப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தினால் மனமுடைந்த அந்தப் பெண்ணின் தந்தை சுவாமிநாதன், எம்எல்ஏ பிரபு தனது மகளை கடத்திச் சென்று திருமணம் செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது குறித்து அந்தப் பெண்ணின் தந்தை கூறியுள்ள தகவலில், எம்எல்ஏ பிரபு தமது குடும்பத்தினருடன் நட்பாக பழகி வந்ததாகவும், அடிக்கடி தங்கள் வீட்டிற்கு வந்த அவர் தனது மகளிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவரின் மனதை மாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
மேலும் இந்த சம்பவத்தினால் மனமுடைந்த பெண்ணின் தந்தை சுவாமிநாதன் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு எம்எல்ஏ பிரபு தனது காதல் மனைவி சவுந்தர்யாவுடன் விளக்கமளித்துள்ளார்.
தனக்கும், சவுந்தர்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது உண்மைதான். ஆனால் நான் சவுந்தர்யாவை கடத்தவோ அல்லது கொலை மிரட்டல் விடுக்கவோ இல்லை எனவும், நானும் சவுந்தர்யாவும் காதலித்துவந்ததாகவும், சவுந்தர்யாவின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டபோது அவர்கள் எங்களின் காதலுக்கு மறுப்பு தெரிவித்து திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும், இதனை அடுத்து எனது பெற்றோரின் சம்மதத்துடன் சவுந்தர்யாவை திருமணம் செய்துகொண்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.