அரசியல் தமிழகம்

கலைஞரின் இரண்டாவது நினைவு தினம்! நினைவிடத்தில் முக ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!

Summary:

kalaingars second anniversary memorial

முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதிமுக தொண்டர்களுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அங்கு முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றார். கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு முன்களப் பணியாளர்களுக்கு நலத்திட்ட  உதவிகளை வழங்கினார். துரைமுருகன், டி.ஆர்.பாலு, எம்.பி, ஆ.ராசா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.


Advertisement