KA Sengottaiyan: 'முதல்வர் விஜய்' கோவை மண்ணில் காலடி வைத்ததும் கர்ஜித்த கே.ஏ. செங்கோட்டையன்.. அதிரடி பேச்சு.!



KA Sengottaiyan Declares TVK Vijay Will Be Tamil Nadu’s Chief Minister in 2026

முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை விஜய் முன்னிலையில் கட்சியில் இணைத்துக்கொண்டார். தொடர்ந்து, சென்னையிலேயே முகாமிட்டு செங்கோட்டையன், இன்று விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பும் நடைபெற்றது. 

செங்கோட்டையன் பேச்சு:

அப்போது பேசிய செங்கோட்டையன், "எம்.ஜி.ஆர். என்னை அடையாளம் காட்டினார். பின் ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றினேன். இன்று மக்கள் சக்தியாக இருக்கும் தவெக தலைவர், நாளைய முதல்வர் விஜயின் கட்சியில், அவருக்காக மக்கள் சக்தியில் இணைந்து பணியாற்றுகிறேன். 2026ல் தமிழக முதல்வராக அவரை மக்கள் ஏற்றுக்கொள்வர். அவர் மக்கள் ஆதரவுடன் முதல்வர் அரியணையில் அமருவார். தொண்டராக இருந்த என்னை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் வந்தது மகிழ்ச்சி. வெற்றி மக்கள் சக்தியாக மாறி இருக்கிறது. 

இதையும் படிங்க: BREAKING: MLA பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்! "ஒரு நாள் பொறுத்திருங்கள் " நாளை தவெக விஜய் கட்சியில் இணைவது உறுதி..!!

KA Sengottaiyan

முதல்வர் விஜய்:

புதிய சமுதாயத்தை உருவாக்க, நேர்மையான ஆட்சியை ஏற்படுத்த, புனித ஆட்சியை கொடுக்க விஜய் புறப்பட்டுள்ளார். அவரின் பயணம் முதல்வராகி தொடரும். மக்கள் சக்தியை வீழ்த்த எந்த சக்தியும் இல்லை. அவரின் பயணம் மேலும்-மேலும் உயர, மக்கள் சேவைக்காக சினிமா துறையை தூக்கியெறிந்துவிட்டு வந்துள்ளார். விஜயுடன் சேர்ந்து அப்பணிகளை நானும் தொடருவேன். எம்.ஜி.ஆர். கட்சியை தொடங்கியபோது, அண்ணாயிசம் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதேபோல, இன்றும் அனைவருக்கும் வீடு, கல்வி, படிப்பு என அனைத்தையும் விஜய் கூறியிருக்கிறார். 

ஜனநாயகம்:

திமுக, அதிமுகவுக்கு மாற்று வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அது விரைவில் ஏற்படும். தவெகவில் ஜனநாயகம் உண்டு. எனது சட்டைப்பையில் ஜெயலலிதாவின் புகைப்படம் இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. விஜயின் வாகனத்தில் அண்ணா, எம்.ஜி.ஆரின் புகைப்படம் இருக்கிறது. நான் என்று ஒருவன் நினைத்தால், தான் என்பதை ஆண்டவன் காட்டிவிடுவான்" என பேசினார்.

இதையும் படிங்க: இதுதாங்க உண்மையான விசுவாசம்! TVK அலுவலகத்திற்கு வந்த செங்கோட்டையன் சட்டைப்பயில் என்ன இருக்குன்னு பாருங்க!