ஜார்கண்டில் தமிழக மருத்துவக்கல்லூரி மாணவர் மர்ம மரணம்; முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல், குடும்பத்திற்கு நிதிஉதவி அறிவிப்பு.!Jharkhand RIMS Hospital Student Mystery Death From Tamilnadu CM Regret and Relief Fund 


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டம்பட்டி, புத்தூர் கிராமத்தில் வசித்துவருபவர் மதியழகன். இவரின் மகன் மதன்குமார் (வயது 27). இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி ராஜேந்திரா மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் (RIMS Hospital), விடுதியில் தங்கிருந்து இரண்டாம் ஆண்டு தடவியல் துறை மருத்துவம் பயின்று வந்துள்ளார். 

நேற்று அவரின் சடலம் தீப்பற்றி எரிந்தவாறு விடுதியின் பின்புறத்தில் இருந்து மீட்கப்பட்டது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மருத்துவக்கல்லூரி மாணவரின் மறைவை அறிந்ததும், தமிழ்நாடு அரசு உடனடியாக செயல்பட்டு மாணவரின் உடலை விமான உதவியுடன் தமிழகம் கொண்டு வந்தது. 

மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோரின் அஞ்சலிக்கு பின்னர் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கட்டு, இன்று காலை நல்லடக்கமும் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர், ரூ.3 இலட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.