தமிழகம்

அப்பல்லோவின் 1.15 கோடிக்கான முழு விபரம்; யார் யார் சாப்பிட்டுள்ளார்கள் தெரியுமா?

Summary:

jayalalitha death - high court - appolo hospital

ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது சாப்பாட்டுக்கான செலவு 1.15 கோடி என தெரிவிக்கப்பட்டது. தற்போது சாப்பிட்டவர்களின் முழு விபரத்தையும் அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த 2016 செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட பல்வேறு கட்ட சிகிச்சைக்கு பிறகு இறுதியாக சிகிச்சை பலனின்றி அதே ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது அவருக்கு செலவிடப்பட்ட செலவுத் தொகை குறித்து அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டது.

அதில் சாப்பாட்டுக்கு மட்டும் 1.15 கோடி என தெரிவிக்கப்பட்டது. இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்போலோ நிர்வாகம் கூறுகையில், சிகிச்சையின் போது ஜெயலலிதா வெறும் பழரசம் மட்டுமே அருந்தினார். அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், உதவியாளர்கள் என்று பலரும் சாப்பிட்டதாலேயே உணவு கட்டணம் ரூ.1.15 கோடி ஆனது என்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement