தமிழகம்

இவர்களுக்கு உதவி செய்தால் அசையா சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் - காவல்துறை எச்சரிக்கை.!

Summary:

இவர்களுக்கு உதவி செய்தால் அசையா சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் - காவல்துறை எச்சரிக்கை.!

பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தால், சம்பந்தப்பட்ட நபர்களின் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என ஜம்மு காஷ்மீர் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சட்டவிரோத செயல்கள் அதிகளவு நடைபெறும் நிலையில், அதனை செயல்படுத்தும் பயங்கரவாதிகளுக்கு உள்ளூர்வாசிகள் ஆதரவளித்து வருகின்றனர். உள்ளூரில் இருக்கும் பிரிவினைவாதிகள் உதவியுடன் தங்களின் தாக்குதலை திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர். 

பாதுகாப்பு படையினருக்கும் - பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதல் வீடுகளில் நடைபெற்று வரும் நிலையில், உள்ளூரில் இருக்கும் பிரிவினைவாதிகள் செயல்களால் அம்மாநிலத்தில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுக்குள் கொண்டு வரும் பணியிலும் சிரமம் ஏற்படுகின்றன. 

இதனால் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவினால், சம்பந்தப்பட்ட நபர்களின் சொத்துக்கள் மற்றும் வீட்டினை பறிமுதல் செய்யும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள காவல் துறையினர், 10 பேரின் வீட்டை முதற்கட்டமாக அடையாளம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 


Advertisement