போராடிய ஆசிரியர்களுக்கு இனி ஜாலிதா; பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை.!

போராடிய ஆசிரியர்களுக்கு இனி ஜாலிதா; பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை.!


jacto-jio-staff-subend-canceld---tamilnadu-gvt

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்துள்ளது  பள்ளிக்கல்வித்துறை.

ஊதிய உயர்வு, பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 22 ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த போராட்டத்தால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல், மாணவர்கள் பெரும் அவதிப்பட்டு நிலையில், தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி கடைசி வாரத்தில் பொதுத் தேர்வுகள் ஆரம்பமாக உள்ளதால், மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்களை பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

jacto geo

மேலும் போராட்டத்தை தொடர்பவர்களின் பணியிடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் எனவும் எச்சரிக்கை பிறப்பித்தது. மேலும் ஆயிரக்கணக்கானோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனால் வேறுவழியின்றி என்ன செய்வதென்று குழம்பிப்போன ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆயிரத்து 111 ஆசிரியர்களின் பணி இடை நீக்கத்தை ரத்து செய்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.

jacto geo

மேலும் தொடக்கக் கல்விதுறை இயக்குனரகத்தின் கீழ் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 500 ஆசிரியர்களின் பணியிடை நீக்கத்தையும் ரத்து செய்துள்ளது. ஆனால் பணியிட மாற்றம் மற்றும் 17b பிரிவின் கீழ் அனுப்பப்பட்ட நோட்டீஸ் நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை திரும்பப் பெறவில்லை.