பிரசவத்தில் கீழே விழுந்த குழந்தை உயிரிழந்த பரிதாபம்... பெற்றோரிடம் காட்ட மறுத்த டாக்டர்... அரசு மருத்துவமனையின் அவலம்...!!

பிரசவத்தில் கீழே விழுந்த குழந்தை உயிரிழந்த பரிதாபம்... பெற்றோரிடம் காட்ட மறுத்த டாக்டர்... அரசு மருத்துவமனையின் அவலம்...!!


its-a-pity-that-the-child-who-fell-down-during-childbir

அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தை செவிலியரின் அலட்சியத்தால் கையில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் சந்தியா என்ற பெண் பிரசவத்திற்காக கடந்த எட்டாம் தேதி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு சந்தியாவிற்கு பனிக்குடம் உடைந்ததால் திருவள்ளுவர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சந்தியாவிற்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தையை பெற்றோரிடம் காட்டாமல் ஆஸ்பத்திரியில் வென்டிலேட்டரில் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து ஒரு வாரம் கழித்து குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிரசவம் பார்க்கும்போது செவிலியர் ஒரு கையில் செல்போனை வைத்துக்கொண்டு மற்றொரு கையில் பிரசவம் பார்த்த போது குழந்தை கை தவறி கீழே விழுந்ததால் குழந்தை இறந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குழந்தையின் உயிரிழக்க காரணமான செவிலியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.