தமிழகம்

அமமுக பிரமுகரின் சகோதரருக்கு திடீர் சிக்கல்.! ஐடி ரெய்டில் சிக்கிய ரூ.175 கோடி.!

Summary:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சேர்ந்தவர் அரசு ஒப்பந்ததாரர் வெற்றி. இவர் மதுரை புறநகர் தெற்கு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சேர்ந்தவர் அரசு ஒப்பந்ததாரர் வெற்றி. இவர் மதுரை புறநகர் தெற்கு அமமுக மாவட்ட செயலாளரும், உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏவுமான மகேந்திரனின் சசகோதரர் ஆவார். வெற்றி ரியல் எஸ்டேட், தியேட்டர் என பல்வேறு தொழில்களை செய்து வருகிறார்.

இவர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்த நிலையில், வெற்றிக்கு சொந்தமான, 12 இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத 3 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், வருமானத்தின் 20 சதவீதத்தில் 2 சதவீதத்தை மட்டும் கணக்கில் காட்டி இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன்மூலம் 175 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Advertisement