ரிபீட்டு.... முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 14 இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.!it raid in former minister home

கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக செயல்பட்டவர் தங்கமணி. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது வருமானத்திற்கு அதிமான சொத்து சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்தவாரம்  லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தினர்.

மொத்தம் 69 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ஏராளமான ரொக்கம், தங்கம், வெள்ளி,  மற்றும் ஊழல் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதவது நாமக்கல் மாவட்டத்தில் 10 இடங்களிலும், ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களிலும், சேலம் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.