திருமணம் நடந்தாலும் பரவாயில்லை... பழைய காதலியை உல்லாசத்திற்கு அழைத்து மிரட்டிய காதலன் கைது...!!it-doesnt-matter-if-the-marriage-takes-place-the-boyfri

ஈரோடு மாவட்டம் கோபி அருகே நம்பியூர் கோசனம் பகுதியில் 23 வயது இளம்பெண் தந்தை இறந்து விட்டதால் தனது தாயுடன் வசித்து வந்தார். அந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டது இந்நிலையில் அந்த பெண் கடந்த மூன்று நாட்களுக்கு முன் காணாமல் போனார்.

உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். இந்நிலையில், தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், என்னை தேட வேண்டாம் என்று தாயின் கைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பினார். இது தொடர்பாக பெண்ணின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் நம்பியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வந்தனர்.

இந்த நிலையில், காணாமல் போன பெண் நேற்று வீடு திரும்பினார். நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி, கோபி, அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்ஐ மேனகா ஆகியோர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண், நம்பியூர் அருகே இருக்கும் கொன்னமடையை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளரான மணிகண்டன் என்பவரை கடந்த வருட ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்துள்ளார். 

அப்போது மணிகண்டன் ஆசை வார்த்தை பேசி பலமுறை அந்த பெண்ணுடன் உல்லாசமாக  இருந்துள்ளார். அதுமட்டுமின்றி அதனை வீடியோவும் எடுத்துள்ளார். இந்த நிலையில் 7 மாதங்களுக்கு முன் வேறு ஒரு பெண்ணுடன் மணிகண்டனுக்கு திருமணம் நடந்துள்ளது. எனவே அந்த பெண் மனவேதனையுடன் தனது காதலனை பிரிந்துள்ளார். இதை தொடர்ந்து அந்த பெண்ணிற்கு அவரது தாயார், திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார்.

இதையறிந்த மணிகண்டன், அந்த பெண்ணை தொடர்பு கொண்டு, இருவரும் உல்லாசமாக இருக்கும் வீடியோவை காண்பித்து மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் தனக்கு அமைய உள்ள வாழ்க்கையை கெடுக்க வேண்டாம் என்று கெஞ்சியுள்ளார். இந்நிலையில் மணிகண்டன் கடைசியாக ஒரு முறை தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் அனைத்து வீடியோ மற்றும் போட்டோவை அழித்து விடுவதாக கூறியுள்ளார். 

வேறு வழியின்றி அந்த பெண் காதலன் கூறியபடி, திருமணத்தில் விருப்பம் இல்லை, தேட வேண்டாம் என தனது தாய்க்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு செல்போனை அனைத்து வைத்துள்ளார். பின்னர் மணிகண்டன், நீலகிரி மாவட்டம் கொடநாடு பகுதிக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று இரண்டு நாட்கள் உல்லாசமாக இருந்துள்ளார்.

அப்போது உல்லாச வீடியோவை அழித்து விடும்படி அந்த பெண் கெஞ்சியுள்ளார் இந்நிலையில் வீடியோவை அழிக்க மறுத்த மணிகண்டன், அந்த பெண்ணிற்கு திருமணம் நடந்தாலும், அவர் கூப்பிடும் போதெல்லாம் அவருடன் வந்து உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் யாரிடமாவது கூறினால், வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். அதன் பிறகு அந்த பெண்ணை நம்பியூரில் கொண்டு வந்து விட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மணிகண்டனை பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் விசாரணை நடத்தி வருகின்றனர்