எப்படி போட்டாலும் அடிக்கிறாரே... மாஸ் காட்டும் இஷான் கிஷான்.! திக்குமுக்காடும் இலங்கை அணி.!

எப்படி போட்டாலும் அடிக்கிறாரே... மாஸ் காட்டும் இஷான் கிஷான்.! திக்குமுக்காடும் இலங்கை அணி.!


Ishan kishan playing very well

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணி, 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று தொடங்கி உள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா, இசான் கிசான் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

 சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 44 ரன்கள் எடுத்தநிலையில் அவுட்டாகி வெளியேறினார். தற்போது இஷான் கிஷானும், ஸ்ரேயாஸ் அய்யரும் ஆடிவருகின்றனர். இஷான் கிஷான் 54 பந்துகளுக்கு 88 ரன்கள் எடுத்து இலங்கை அணியை திணற வைத்து ஆடி வருகிறார்.