உஷார்.. பிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட திடீர் தீ விபத்து.! உடல் கருகி உயிரிழந்த இன்ஸ்பெக்டர்.! சோக சம்பவம்!!

உஷார்.. பிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட திடீர் தீ விபத்து.! உடல் கருகி உயிரிழந்த இன்ஸ்பெக்டர்.! சோக சம்பவம்!!


Inspector dead by burst fridge in home

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் 40 வயது நிறைந்த சபரிநாத். இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேள்ள நல்லூரை சேர்ந்தவர். இவரது மனைவி சில காலங்களுக்கு முன்பு உயிரிழந்தார். மேலும் அவர் சென்னையில் பணியாற்றி வந்ததால் நல்லூரில் உள்ள வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டுள்ளார்.

மேலும் மற்றொரு பகுதியை இவர் ஊருக்கு செல்லும்போது பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவர் விடுப்பில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்பொழுது கீழே வாடகைக்கு குடியிருக்கும் சாந்தி என்பவர் சபரிநாத்திற்கு சமைப்பதற்காக அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவர்களது வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Inspector

அதில் சபரிநாதன் மற்றும் சாந்தி இருவரும் தீயில் சிக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் தீயில் கருகி உயிரிழந்த சபரிநாத் மற்றும் சாந்தி இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் வீட்டிலிருந்த ஃப்ரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.