கோவையில் கல்லூரி வளாகத்திற்குள்.... உருட்டுக்கட்டையுடன் வந்த வடமாநில தொழிலாளர்கள்... அதிர்ச்சி வீடியோ..!!

கோவை மாவட்டம் சூலூரில் வடமாநில தொழிலாளர்கள், தனியார் கல்லூரிக்குள் உருட்டுக்கட்டைகளுடன் புகுந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தமிழர்களை விரட்டி விரட்டி தாக்குதல் நடத்திய வீடியோ தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்குள் வட மாநிலத்தவர்கள் உருட்டுக்கட்டைகளுடன் புகுந்த காட்சிகள் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூரில் இருக்கும் தனியார் கல்லூரி கேண்டினில் தினமும் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உணவருந்தி வருகின்றனர். இந்த கேண்டினில் 15 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு இன்ஜினியரிங் மாணவர்களுக்கும், கல்லூரி கேண்டினில் வேலை செய்யும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதை பார்த்த மாணவர்கள் கேண்டினில் இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகம் சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். கல்லூரிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருதரப்பினருக்கும் இடையே சமாதானம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக கல்லூரிக்குள் வடமாநிலத் தொழிலாளர்கள் சிலர் உருட்டுக்கட்டைகளுடன் சென்ற வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.