இன்புளூயன்ஸா காய்ச்சலால்; பதற்றப்படும் சூழ்நிலை தற்போது இல்லை... அமைச்சர் மா சுப்பிரமணியன்..!



Influenza fever; There is no panic situation now... Minister Ma Subramanian..!

தமிழகம் முழுவதும் நேற்று மொத்தம் 50,000 சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. சென்னையில் தி.நகர் பஸ் நிலையம் அருகில், அமைக்கப்பட்ட தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்த சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் இதுவரை சுமார் 1044 பேருக்கு இன்புளூயன்ஸா காய்ச்சல் கண்டறியப்பட்டது, தற்போது 364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், காய்ச்சல் அறிகுறி இருக்கும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இன்புளூயன்ஸா காய்ச்சல் காரணமாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதற்கான அவசியம் தற்போது இல்லை. 

இது குறித்து கவலைபட வேண்டிய சூழல் தற்போது இல்லை. இதற்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் 365 நாட்களும் குழந்தைகள் படிக்காமல் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படும். எனவே தலைவர்கள் அறிக்கைகள் விடும்போது நோயின் தன்மை குறித்து ஆராய்ந்து, அறிக்கை விட வேண்டும். அதன் பாதிப்புகளை வைத்து பேட்டிகளின் மூலம் அறிக்கைகளின் மூலம் மக்களை பதற்றமடையச் செய்ய கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.