அண்ணன்-தம்பி சொத்து தகராறில், 14 வயது சிறுமி கொலை முயற்சி.. வேலூரில் அதிர்ச்சி.!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு, ஓங்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவரின் சகோதரர் சுரேஷ் பாபு. சகோதர்களுக்கு இடையே நிலம் தொடர்பான தகராறு இருந்து வந்துள்ளது.
இதனால் இருதரப்பு குடும்பத்தினரும் அவ்வப்போது வாக்குவாதம் செய்து வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்றும் அதேபோல வாக்குவாதம் அடைந்துள்ளது.
இதையும் படிங்க: சாலையில் இருந்த வைக்கோலால் தீப்பிடித்த கார்; உயிரே போயிருக்கும்.. பெண் ஆதங்கம்.!
சிறுமி மீது தாக்குதல்
ராஜ்குமாருக்கு 14 வயதுடைய மகள் இருக்கிறார். இவர் பேர்ணாம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இன்று மாணவி பள்ளிக்கு சென்ற நேரத்தில், சிறுமியின் சித்தப்பா சுரேஷ், அவரின் மனைவி மேகலா, சிறுமியின் மீது தாக்குதல் நடத்தினர்.
மேலும், கத்தியால் தலையை வெட்டி காயப்படுத்தினர். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பேரணாம்பட்டு காவல்துறையினர், சிறுமியின் சித்பாபு சுரேஷ் பாபுவை கைது செய்தனர். இந்த சம்பவம அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கியது.
இதையும் படிங்க: வேலூர் பெண் மருத்துவர் கூட்டுப்பாலியல் பலாத்கார விவகாரம்; 20 ஆண்டுகள் சிறை தண்டனை.!