நள்ளிரவில் பெண்ணின் கழுத்தை அறுத்து பணம் நகை பறிப்பு!.. தப்பிக்க கடலுக்குள் ஓடிய வாலிபரை மடக்கி பிடித்த போலீசார்..!

நள்ளிரவில் பெண்ணின் கழுத்தை அறுத்து பணம் நகை பறிப்பு!.. தப்பிக்க கடலுக்குள் ஓடிய வாலிபரை மடக்கி பிடித்த போலீசார்..!



In the middle of the night, the woman's neck was cut and the money and jewelry were stolen

நள்ளிரவில், நான்கு பேர் கொண்ட கும்பல் ஒரு பெண்ணை தாக்கி கழுத்தை அறுத்ததில் பாதிக்கப்பட்ட பெண் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சென்னை மெரினா கடற்கரை அருகில் பட்டினபாக்கம் வரை செல்லும் சர்வீஸ் சாலையில், இன்று நள்ளிரவு 1.30 மணியளவில் பெண் ஒருவர் ஆட்டோவில் இருந்துள்ளார். அப்போது, குடித்துவிட்டு அங்குவந்த நான்கு பேர் மழை பெய்வதால் நாங்களும் இங்கு சற்று நேரம் இருந்துவிட்டு செல்கிறோம் என சொல்லி அங்கு நின்றுள்ளனர். 

அப்போது, அந்த நான்கு பேரும், திடீரென அந்த பெண்ணை தாக்கி அவரின் கழுத்தை அறுத்து விட்டு, கையில் இருந்த 10 ஆயிரம் பணம் மற்றும் காதில் இருந்த தங்க கம்மலை, பறித்துக்கொண்டு தப்பியோடினர். அப்போது, எதிர் சாலையில், அந்த வழியாக வந்த காவல்துறையினர், அந்த பெண்ணின் கூச்சலை கேட்டு, சந்தேகம் அடைந்து, வேகமாக ஓடிய நான்கு பேரையும் துரத்தி சென்றனர்.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் தப்பியோடிய நிலையில் ஒருவர் மட்டும் மெரினா கடற்கரையில் இறங்கி கடலுக்குள் குதித்தார். அவரை துரத்தி சென்ற காவல்துறையினர் கடலுக்குள் இறங்கி அந்த நபரை பிடித்தனர்.
பிடிபட்டவர் ஐனாவரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பது தெரியவந்தது.
சந்தோஷ்குமார் மீது ஏற்கனவே கொலைமுயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது என்றும் தெரியவந்தது. 

தப்பியோடிய மற்ற மூன்று பேரும் பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தெரியவந்ததால், காவல்துறையினர் தப்பியோடிய மூன்று பேரையும் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மதுபோதையில் நான்கு பேர் கொண்ட கும்பலால் கழுத்தறுத்து, தாக்கப்பட்ட பெண் சிறு காயங்களுடன் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.