தந்தையின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மகன் சிறையில் அடைப்பு; ஆத்திரத்தில் பல்லை உடைந்ததால் சோகம்.!in Puzhal Son getting Jailed asper Father Complaint 


சென்னையில் உள்ள புழல் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தன் (வயது 46). இவர் கட்டுமான பொருட்கள் விநியோகம் செய்யும் நபராக இருந்து வருகிறார். கோவிந்தனின் மனைவி வசந்தா. தம்பதிகளுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகும் நிலையில், 2 மகன், மகள் இருக்கின்றனர். 

வேறொரு பெண்ணுடன் தொடர்பு

இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து, தனித்தனியே தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இதனிடையே, கோவிந்தன் - வசந்தா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் கடந்த இரண்டு ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த சமயத்தில், கோவிந்தனுக்கு பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணின் கணவர் கொலை; ஊராட்சிமன்ற தலைவர் கைது.!

மூத்த மகன் எதிர்ப்பு

இது கோவிந்தனின் மூத்த மகன் குப்புசாமிக்கு (வயது 26), தந்தையின் மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கடந்த மே 14ம் தேதி விநாயகபுரம் பகுதியில் தந்தை - மகன் சந்தித்துக்கொண்ட நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்து பின் கைகலப்பானது. 

தந்தையை தாக்கிய புகாரில் மகன் கைது

இந்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த மகன் உருட்டுக்கட்டையால் தந்தையை சரமாரியாக தாக்கி இருக்கிறார். இந்த சம்பவத்தில் கோவிந்தனின் பற்கள் உடையவே, அவர் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விஷயம் குறித்து புழல் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் குப்புசாமி கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: கள்ளக்காதலை அறிந்த தந்தை கொடூர கொலை; பாசக்கார மகளின் பதறவைக்கும் சம்பவம்.!