கோடியில் வாழ்க்கை வாழும் தல அஜித்தின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா?
மனைவியின் கள்ளக்காதலனை உயிருடன் புதைத்து கொன்ற கணவன்.. சடலமாக யோகா ஆசிரியர்.. மாதங்கள் கழித்து அம்பலமான உண்மை.!

கள்ளக்காதல் உறவால் யோகா ஆசிரியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோஹ்தக், பாபா மஸ்தாத் பல்கலைக்கழகத்தில், யோகா ஆசிரியராக வேலை பார்ப்பவர் ஜெகதீப். இவர் கடந்த டிசம்பர் 24, 2024 அன்று கொலை செய்யப்பட்டார். சுமார் 3 மாதங்களுக்கு பின்னர், அவரின் உடல் அதிகாரிகளால் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. ஜெகதீப்பின் கொலை சம்பவம் குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அதிர்ச்சி தகவல் அம்பலமானது.
இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் ஜல்சா.. கணவனை மாட்டிவிட மனைவி எடுத்த அஸ்திரம்.. போலீசுக்கே ட்விஸ்ட் வைத்த பெண்.!
அதிகாரிகள் விசாரணை
அதாவது, ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டம், மண்டோபதி கிராமத்தில் வசிப்பவர் ஜெகதீப். இவர் கடந்த டிச.24 அன்று பணிக்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. ஜெகதீப் எங்காவது சென்றிருப்பார், வந்துவிடுவார் என அமைதி காத்த குடும்பத்தினர், 10 நாட்களுக்கு பின்னர், ஜனவரி மாதம் 3ம் தேதியில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் ஜெகதீப்பை அதிகாரிகள் தேடி வந்தனர்.
கள்ளக்காதல் பழக்கம்
அவரின் செல்போன் விபரங்கள் ஆராயப்பட்டு, அவர் யாருடன் பேசினார்? என ஆராயப்பட்டது. பின் வழக்கில் ஜெகதீப்பை கொலை செய்ததாக ஹர்தீப், தரம்பால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரித்தபோது, கொலைக்கான மர்மம் விலகின. கொலை செய்ப்பட்ட ஜெகதீப், வாடகை வீட்டில் வசித்து வந்தபோது, பெண் ஒருவருடன் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
கை-கால் கட்டிப்போட்டு புதைப்பு
இதனால் பெண்ணின் கணவர் ஜெகதீப்பை கொலை செய்ய முடிவெடுத்த நிலையில், சம்பவத்தன்று ஜெகதீப் வீடு தேடிச் சென்ற ஹர்தீப், தரம்பால் சேர்ந்து ஜெகதீப்பை கடுமையாக தாக்கினர். பின்னர் கை-கால்களை கட்டி, வாயில் டேப் ஒட்டி காரில் கடத்தப்பட்ட ஜெகதீப், 61 கிமீ தொலைவில் இருக்கும் கிராமத்தில், வயலில் 7 அடி குழிதோண்டி புதைக்கப்பட்டார். இந்த விஷயத்தில் தொடர்புடைய இருவரை கைது செய்த காவல்துறையினர், வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவியின் கள்ளக்காதலால் கம்பி என்னும் கணவன்; கூடா ண்டட்பு குடும்பத்துக்கே ஆப்பு வைத்த சோகம்.!