தமிழகம்

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம்! மாநில சுகாதாரத் துறை அதிரடி அறிவிப்பு..!

Summary:

In future tamilnadu people mostly affected by the corona WHO

தமிழகத்தில் 124 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று ஒரே நாளில் 110 அதிகரித்து மொத்தம் 234 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இனிவரும் நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளதாக பொதுசுகாதாரத் துறையின் மூலமாக செய்தி தாள்களில் மக்களுக்கு ஒரு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும், வெளியே சென்று வீடு திரும்பும் போது கை, கால்களை சுத்தமாக கழுவவும், முடிந்த வரை மக்கள் வீட்டிலேயே இருக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனர். 

மேலும் வணிக நிறுவனங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் சந்தைகள் மற்றும் பொது இடங்களில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அதனை மீறும் நிறுவனங்கள் மீது சுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுசுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


Advertisement