புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
விபத்தில் ஏர் பேக் திறந்தும் பறிபோன பெண்ணின் உயிர்.. மாதா கோவிலுக்கு செல்லும் வழியில் சோகம்..!
உறக்கத்தில் கார் உட்பட வாகனங்களை இயக்குவது விபத்திற்கு வழிவகை செய்யும்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர், தங்களுக்கு சொந்தமான கார் ஒன்றில் வேளாங்கண்ணியில் உள்ள மாதா கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தனர். இவர்களின் கார் சம்பவத்தின்போது கடலூர் மாவட்ட எல்லைக்குள் பயணம் செய்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விளக்கம்பாடி பகுதியில் இவர்களின் கார் சென்றபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தரைபாலத் தடுப்பின் மீது மோதி, சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இதையும் படிங்க: லாரியை முந்திச்செல்ல முயன்று விபரீதம்; 7ம் வகுப்பு மாணவர் தாய் கண்முன் உடல் நசுங்கி பலி.!
உறக்கத்தால் சோகம்
அதிகாலை நேரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பயணம் செய்த நிலையில், ஓட்டுனரின் உறக்க கலக்கம் காரணமாக விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட காரில் இருந்த ஐவரும் காயமடைந்தனர். இவர்களில் ஒருவருக்கு அருகே இருந்த பெண் பலியானார்.
கார் விபத்திற்குள்ளானதும் ஏர் பேக் விரைந்து திறந்த நிலையில், அவரின் மரணம் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். காயமடைந்தோர் கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். அவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: லாரி சக்கரத்தில் சிக்கி தலையில்லாமல் வந்த மகளின் உடல்; இறுதி அஞ்சலியை மனம்நொந்து போட்டோ வைத்து நிறைவேற்றிய குடும்பத்தினர்.!