BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
நெஞ்சமெல்லாம் பதறுதே.. 17 வயது சிறுமி 7 கல்லூரி மாணவர்களால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; கோவையில் பதறவைக்கும் கொடுமை..!
சோசியல் மீடியாவில் பேசிய சிறுமியை பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இரண்டு தனியார் கல்லூரியில், 7 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் கோவையில் உள்ள குனியமுத்தூர் பகுதியில், அறையெடுத்து தங்கி இருக்கின்றனர்.
சமூக வலைதளத்தின் வாயிலாக இவர்கள் கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் பழக்கத்தை ஏற்படுத்தி பேசி வந்த நிலையில், நேரில் சந்திக்கலாம் என கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுமியை அறைக்கு வரைஅழைத்துள்ளனர்.
இதையும் படிங்க: உடற்பருமனால் சோகம்; தங்கை தற்கொலை., அண்ணன் உயிர் ஊசல்.! கோவையில் சோகம்.!
கூட்டுப்பாலியல் பலாத்காரம் அம்பலம்
அங்கு 7 பேர் கும்பலால் சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரத்தை எதிர்கொண்டார். சிறுமி இந்த நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை என்பதால், பதறிப்போன பாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் இருப்பிடத்தை அறிந்து மீட்டனர். விசாரணையில் அவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமையை எதிர்கொண்டது தெரியவந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார்.
மேலும், இதுதொடர்பாக ஏழு கல்லூரி மாணவர்கள் போக்ஸோவில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை தொடருகிறது.
இதையும் படிங்க: கோவை: 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; ஆபாச படம் பார்த்து 4 சிறார்கள் அதிர்ச்சி செயல்.!