த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
நீச்சல் குளத்தில் துள்ளத்துடிக்க பறிபோன உயிர்; 3 வயது சிறுவன் பரிதாப பலி.!
சென்னை ஈஞ்சம்பாக்கம், சாய் பாபா தெருவில் வசிப்பவர் சுகுமாரன். கார் ஓட்டுநரான இவர், தொழிலதிபரிடம் வேலை பார்க்கிறார். தற்போது தொழிலதிபரின் பணியாளர்களுக்கான குடியிருப்பில் இவர் மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சுகுமாரின் இரண்டாவது மகன் நிதிஷ் (3).
இவர்கள் வசித்து வரும் வீட்டில் நீச்சல் குளம் இருப்பதாக தெரியவருகிறது. இதனிடையே, சிறுவன் நிதிஷ் நேற்று வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்தார். பின் நீண்ட நேரமாக காணவில்லை. இதனால் மகனை தாய் பல இடங்களில் தேடி அலைந்து இருக்கிறார்.
மகன் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், நீச்சல் குளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்டெடுக்கப்பட்டார். உடனடியாக அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், அங்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் முதலுதவியுடன் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: திருச்சி: நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி உறக்கத்திலேயே மரணம்? நூடுல்ஸ் பிரியர்களே, பெற்றோரே உஷார்.!
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவனின் உயிர் பிரிந்துவிட, தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மருத்துவரின் பரிந்துரையின்றி கருக்கலைப்பு மாத்திரை; 3 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த சோகம்.!