த்ரிஷாவை விட வயது குறைவு... ஆனால் அம்மா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகை! யார் தெரியுமா?
#Breaking: சென்னையில் 1 மணிநேரத்திற்குள் 7 இடங்களில் அடுத்தடுத்து செயின் பறிப்பு.. வலிமை திரைப்பட பாணியில் பயங்கரம்.!

வலிமை திரைப்பட பாணியில் சென்னை தொடர் செயின்பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் நடக்கும் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நகரில் அதிகரித்து வரும் திருட்டு உட்பட பல்வேறு செயல்களை கட்டுக்குள் வைத்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சென்னை மாநகர காவல்துறை பல புதிய திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், இன்று காலை 1 மணிநேரத்திற்குள் சென்னை நகரின் வெவ்வேறு பகுதியில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.
இதையும் படிங்க: Chennai: அலட்சியத்தால் சோகம்.. ஈரமான கையுடன் செல்போனுக்கு சார்ஜ்.. ஸ்விட்சை தொட்டதும் பறிபோன உயிர்.!
அடுத்தடுத்து செயின் பறிப்பு
திருவான்மியூர் சாஸ்திரி நகரில் லட்சுமி என்ற 45 வயதுடைய பெண்ணின் நகைகள் பறிக்கப்பட்டது. கிண்டியில் நிர்மலா என்ற மூதாட்டியின் 5 சவரன் நகைகள் பறிக்கப்பட்டது. சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனை பகுதியில், இந்திரா என்ற 50 வயது பெண்ணின் 1 சவரன் நகை பறிக்கப்பட்டது. வேளச்சேரியில் உள்ள டான்சி நகரில், 70 வயதுடைய விஜயா என்ற பெண்ணின் நகை பறிக்கப்பட்டது. பள்ளிக்கரணையிலும் செயின் பறிப்பு நடந்துள்ளது.
தனியாக இருந்த பெண்கள், சாலையில் வாக்கிங் சென்றவர்கள் ஆகியோரை குறிவைத்து அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. காலை 6 மணிமுதல் 7 மணிவரை, ஒருமணிநேரத்திற்குள் 7 இடங்களில் திருட்டு சம்பவம் நடந்தாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அஜித்தின் வலிமை திரைப்படத்தில், இருசக்கர வாகனத்தில் வருவோர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இருக்கும். அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் ஜல்சா.. கணவனை மாட்டிவிட மனைவி எடுத்த அஸ்திரம்.. போலீசுக்கே ட்விஸ்ட் வைத்த பெண்.!