#Breaking: மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: வெள்ளத்தில் மிதக்கப்போகும் தென் தமிழகம்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

#Breaking: மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: வெள்ளத்தில் மிதக்கப்போகும் தென் தமிழகம்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



IMD Report Red Alert for Tamilnadu 4 Districts in South 

 

இலங்கையை ஒட்டியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழகத்தில் கனமழைக்கான எச்சரிக்கை மற்றும் அடுத்த 6 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலான மழைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. 

இன்று காலை முதலாகவே கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தேசிய - மாநில பேரிடர் மீட்பு படையினரும் அம்மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாநில பேரிடர் மீட்பு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கின்றனர். 

இந்நிலையில், இன்றும் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நாளைய தினத்தில் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், தஞ்சாவூர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.