மகளின் பெயர்சூட்டு விழாவை பிரம்மாண்டாமாக நடத்திய ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா! வைரல் வீடியோ....
கணவனின் நண்பனுடன் கசமுசா..! ஆசையை கட்டுப்படுத்த முடியாத சத்யா..! அதன்பின் நடந்த விபரீதம்..!

தனது மனைவியுடன் தகாத உறவில் இருந்த நண்பனை தனது சக நண்பர்களுடன் சேர்ந்து நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தவர்கள் நித்தியானந்தம், பூவரசன் மற்றும் பிரதாப். மூவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த நிலையில் மூவரும் நண்பர்களாக பழகிவந்துள்ளனர். இதனிடையே நித்தியானந்தம் மற்றும் பூவரசன் இருவரும் பைக் திருட்டு உள்ளிட்ட சில திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
ஒருமுறை திருட்டு வழக்கில் நித்தியானந்தம் போலீசாரிடம் மாட்டிக்கொள்ள போலீசார் நித்தியானந்ததை கைது செய்து சிறையில் அடைத்தனர். தனது கணவர் சிறையில் இருப்பதை அறிந்த நித்தியானந்ததின் மனைவி சத்யா கணவனின் நண்பன் பிரதாப்பிடம் உதவி கேட்டுள்ளார்.
சத்யா தன்னிடம் உதவி கேட்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி கள்ள காதலில் ஈடுபட வைத்துள்ளார் பிரதாப். பிரதாப் மீதான கள்ளக்காதல் மோகத்தில் சத்யா அவரது கணவனை ஜாமீனில் எடுக்கவில்லை. இந்த விஷயம் எப்படியே சிறையில் இருக்கும் நித்தியானத்திற்கு தெரியவர, வெளியே சென்ற உடன் பிரதாப்பை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதற்காக தனது நண்பர் பிலிப் என்பவரிடம் நித்தியானந்தம் உதவி கேட்க, அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஒருவழியாக சிறையில் இருந்து வெளியே வந்த நித்தியானந்தம் தனது நண்பன் பிலிப் மூலம் பிரதாப்பை மது அருந்த அழைத்துள்ளார். மது அருந்தும் ஆசையில் பிலிப் கூப்பிட்ட இடத்திற்கு பிரதாப்பும் சென்றுள்ளார்.
அங்கு சென்ற அனைவரும் மது அருந்திய நிலையில் பிரதாப் மது போதை அதிகமாகி மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் முன்னதாகவே திட்டமிட்டபடி நித்தியானந்தம், பூவரசன், பிலிப் மூவரும் பிரதாப்பின் கழுத்தை கத்தியால் அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதன்பின்னர் பிணத்தை வெகு தூரத்தில் உள்ள கிணற்றில் கொண்டுபோய் போட்டுவிட்டு, கிணற்றின் மீது முள்செடிகளை போட்டு அந்த கிணற்றை பாழுங்கிணறு போல் மாற்றியுள்ளனர்.
மேலும் பிரதாப்பின் உடல் வெளியே வந்துவிடாமல் இருக்க உடலில் கல்லை கட்டி கிணற்றுக்குள் வீசியுள்ளனர். இதனிடையே பிரதாப்பை காணவில்லை என அவரது பெற்றோர் அவருக்கு போன் செய்துள்ளனர். ஆனால் பிரதாப் போனை எடுக்கவில்லை, பல இடங்களில் தேடியும், விசாரித்தும் அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை என்ற நிலையில் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
புகாரை அடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் சந்தேகத்தின்பேரில் நித்தியானந்தம், பூவரசனிடம் விசாரித்தபோது நடந்த சம்பவங்களை அவர்கள் வாக்குமூலமாக கொடுத்துள்ளனர். இதனை அடுத்து பிரதாப்பின் உடல் வீசப்பட்ட கிணற்றுக்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்து பிரதாப்பின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் நித்தியானந்தம், பூவரசன், பிலிப் ஆகிய மூவரையும் கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தால் இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.