BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
தகாத உறவால் 17 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை.. குப்பை தொட்டியில் வீசிய அவலம்!
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தெருவில் குழந்தை அழும் சத்தம் கேட்டு அந்த தெருவில் வசித்தவர்கள் சந்திக்கமடைந்து திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு பத்திரமாக கொண்டு சென்றனர்.

இது குறித்து போலீஸார் நடத்திய சரணியில் குழந்தையை விட்டு சென்ற தாய், அருகில் உள்ள விடுதிகள் தங்கி இருப்பதே தெரியவந்தது. அதன்படி குழந்தையின் தாய் 17 வயதுடைய சிறுமி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சிறுமியின் பெற்றோர் பார்வையற்றவர்கள். இதில் சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் ஏற்பட்ட தகாத உறவு சிறுமியை கர்ப்பமாகியுள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் கர்ப்பம் வெளியில் தெரிய வந்ததால், அவமானம் ஏற்படும் என்பதை அறிந்து சென்னைக்கு வந்துள்ளார். மேலும் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இருந்த அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை சிறுமி தெருவில் போட்டுவிட்டு சென்றுள்ளார்.

தற்போதைய திருவல்லிக்கேணி போலீசார் சிறுமியையும், குழந்தையையும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனிடையே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.