நானே ஓசி குடி என்கிட்ட அபராதம் கேட்டா... கட்ட முடியாது என்ன இப்ப.....போலீசாரிடம் சென்னை பெண் அல்ராசிட்டி..!!!

நானே ஓசி குடி என்கிட்ட அபராதம் கேட்டா... கட்ட முடியாது என்ன இப்ப.....போலீசாரிடம் சென்னை பெண் அல்ராசிட்டி..!!!


If you ask me for a fine if you drink alcohol yourself... you can't pay it now..... Chenna.

தினமும் குடித்துவிட்டு தான் வருகிறேன். நானே ஓசியில குடிச்சிட்டு, அபாரத தொகையையெல்லாம் கட்ட முடியாது, என கத்தி ரகளை செய்த பெண்.

சென்னையில், மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த பெண் தன்னை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலரிடம் கடும் வாக்குவாதம் செய்தார். மோட்டார் சைக்கிளில் சைதாப்பேட்டை வழியாகத் தள்ளாடியபடி வந்த இளம்பெண்ணை தடுத்து நிறுத்தி, பிரீத் அனலைசர் கருவி மூலம் காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த பெண் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தது தெரியவந்தது.

வேளச்சேரியைச் சேர்ந்த மீனா என்ற அந்த பெண்ணிற்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். தினமும் குடித்துவிட்டு தான் வண்டி ஒட்டி வருகிறேன் என்றும், நானே ஓசியில் குடித்துவிட்டு வருகிறேன் என்னால் அபாரத தொகையையெல்லாம் கட்ட முடியாது என்று கத்தி ரகளை செய்துள்ளார் மீனா. அவரின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து காவல்துறையினர், அவரை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.