தமிழகம் காதல் – உறவுகள்

பேஸ்புக் காதலி மீது மோகம்! காதல் மனைவியை ஏமாற்றி கணவன் போட்ட கும்மாளம்! வெளியான பகீர் சம்பவம்!

Summary:

husband try to kill wife for facebook love

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிக்கோடு என்ற பகுதியில் வசித்து வந்தவர் ரூபஸ் ஜெரால்டு. இவர் 15 வருடங்களுக்கு முன்பு காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தேவகுமாரி என்ற பெண்ணை காதலித்துள்ளார். இந்நிலையில் தேவகுமாரியின் தந்தை தனது மகளின் விருப்பத்தை நிறைவேற்ற 101 சவரன் நகை, 10 லட்சம் ரூபாய் பணம் வரதட்சணையாக கொடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். மேலும் இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு இவர்களது வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் ஜெரால்டுவிற்கு பேஸ்புக் மூலம் 21 வயது இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தொடர்ந்து சாட் செய்ததில் அவர்களுக்கிடையே நெருக்கம் அதிகமானது. பின்னர் ஜெரால்டு தனது மனைவியின் நகைகள் அனைத்தையும் அவருக்கு கொடுத்துள்ளார். அதிக பணமும் செலவழித்து வந்துள்ளார். இந்த விவகாரம் தேவகுமாரிக்கு தெரியவந்த நிலையில் அவர் கோபித்துக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

facebookக்கான பட முடிவுகள்

இதனை தனக்கு வசதியாக பயன்படுத்திக்கொண்ட ஜெரால்டு அந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து வந்து ஒன்றாக இருந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தேவகுமாரிக்கு தகவல் தெரிவித்த நிலையில் பெரும் பஞ்சாயத்து ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜெரால்ட் யாருக்கும் தெரியாமல் மூலச்சல் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு தனது பேஸ்புக் காதலியை தங்கவைத்து ரகசிய குடும்பம் நடத்தினார்.

இது அவரது மனைவிக்கு தெரியவந்த நிலையில் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இந்நிலையில் ஆத்திரமடைந்த ஜெரால்டு கூலிப்படையை ஏவி தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். ஆனால் தேவகுமாரி தப்பிவிட்டார். இந்நிலையில் ஜெரால்டுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement