திடீரென திருநங்கையாக மாறிய கணவன்..! சேலை கட்டிக்கொள்ளும் வினோதம்..! மூன்று குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு..!

கணவன் திடீரென திருநங்கைகள் போல் நடந்துகொள்வதால், மனஉளைச்சல் அடைந்த மனைவி தனது குழந்தைகளுடன் தற்கொலைக்கு துணிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் மேல்மொணவூர் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (42). கட்டிட தொழிலாளியான இவருக்கும், ஜெயந்தி (36) என்ற பெண்ணிற்கும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் முடிந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தனது குழந்தைகளுடன் வந்த ஜெயந்தி, தான் மறைத்துவைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தனது மீதும், தன் பிள்ளைகள் மீதும் ஊற்றி, தற்கொலை செய்ய முயன்றுள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.
இதனை அடுத்து நடந்த விசாரணையில், கட்டிட வேலை செய்து வந்த எனது கணவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருநங்கைகள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டது. தற்போது எனது கணவரும் சேலை கட்டிக்கொண்டு, நான் ஆண் இல்லை. நானும் ஒரு பெண் என கூறி சேலையை எடுத்து கட்டிக்கொள்கிறார்.
இதனால் தங்களுக்கு அவமானமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் சொந்தக்காரர்களும் கேலி கிண்டல் செய்கின்றனர். இதனால் நான் அவரை கண்டித்தநிலையில், இப்போது, எங்களைத் தனியாக தவிக்க விட்டுவிட்டு திருநங்கைகளுடன் சென்றுவிட்டார்.
இதனால் தாங்கள் வறுமையில் வாடுவதாகவும், சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்படுகிறோம். குழந்தைகள் பசியில் வாடுகிறது. இந்த மன வேதனையில்தான் குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயற்சி செய்தேன் என கூறி அழுதுள்ளார் ஜெயந்தி. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.