தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
சொந்த வீட்டில் 550 பவுன் நகையை திருடி கள்ளக்காதலிக்கு கொடுத்த கணவர்.. ஷாக்கான மனைவி...!

சென்னை, பூந்தமல்லியில் உள்ள முத்துநகரில் வசித்து வருபவர் சேகர்(40) இவரது தம்பி ராஜேஷ் (37). திருமணமான இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் அவர்களது தாயாருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகில் ஸ்வீட்ஸ் ஸ்டால் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பைனான்ஸ் தொழிலும் செய்து வருகின்றனர்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சேகரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் திரும்பி வந்து பார்த்த போது அவர் பீரோவில் வைத்துச் சென்ற 300 சவரன் நகையை கானவில்லை. இதை தொடர்ந்து ராஜேஷ் தனது பீரோவை சோதனை செய்த போது ராஜேஷ்ன் மனைவி மற்றும் அவர்களுடைய அம்மாவின் சுமார் 200 பவுன் நகையும், 5 தங்க கட்டிகளும் கானாமல் போய் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து ராஜேஷ் பூந்தமல்லி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் ராஜேஷின்அண்ணன் சேகர் 550 சவரன் நகையை திருடி அவரது தோழியான ஒரு பெண்ணிடம் கொடுத்திருப்பது தெரிந்தது. மேலும் போலீசார் சேகரிடம் விசாரணை நடத்தியதில், இவருக்கும் வேளச்சேரி கேசரிபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த ஸ்வாதி(22) என்பவருக்கும் பழகி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் போரூர் பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் அடிக்கடி சந்தித்துக்கொள்வர்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் வீட்டிலிருந்த 550 பவுன் நகையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சென்று ஸ்வாதியிடம் கொடுத்துள்ளார். மேலும் ஸ்வாதிக்கு கார் ஒன்று வாங்கிக் கொடுத்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் விசாரணையில் சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகையை சேகர் திருடியிருப்பது தெரியவந்தது. சேகர் மற்றும் அவரது தோழி ஸ்வாதியை பூந்தமல்லி காவல்துறையினர் கைது செய்தனர். ஸ்வாதியிடமிருந்த காரை பறிமுதல் செய்தனர். மேலும் நகைகளை எங்கே வைத்துள்ளார் என்று காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.