தமிழகம்

மனைவியை கழுத்தை அறுத்து துடி துடிக்க கொன்ற கணவன்! அதிர்ச்சி காரணம்.!

Summary:

வேலூர் மாவட்டத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு, மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டாவைச் சோ்ந்தவா் மணிகண்டன். 30 வயதான இவா் ஒசூா் சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், மணிகண்டனுக்கும் பெங்களூருவைச் சோ்ந்த சிந்துஜா என்ற பெண்ணிற்கும், நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்தநிலையில் இந்த தம்பதிக்கு 3 வயதில் குழந்தை உள்ளது. இந்த தம்பதி குழந்தையுடன் ஒசூா், லட்சுமி நாராயண நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். இந்தநிலையில் மணிகண்டனுக்கு, மனைவி சிந்துஜாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதன்காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை காலை கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சிந்துஜாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் காவல் நிலையத்தில் சரண் அடைந்து மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சிந்துஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement