இரவு முழுவதும் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மனைவி! கணவன் செய்த கொடூர காரியம்!Husband killed wife in Chennai

சென்னையில் மனைவியை கணவன் சுத்தியலால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(69), அவரது மனைவி ஜோதி(60). இவர்களுக்கு இரண்டு மகன்களும், நான்கு மகள்களும் உள்ளனர். அனைவர்க்கும் திருமணம் முடிந்துவிட்ட நிலையில் தம்பதியினர் இருவரும் அவரது இளைய மகன் வீட்டில் வசித்துவந்துள்ளனர்.

இந்நிலையில் ராமகிருஷ்ணனுக்கு சில நாட்களுக்கு முன்னர் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்துள்ளது. இதனால் சிகிச்சை பெற தனது சொந்த வீட்டை விற்க மனைவி மற்றும் பிள்ளைகளிடம் கேட்டுள்ளார். ஆனால், அவரது மனைவி ஜோதி இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Crime

வீட்டை விற்க கூடாது என்றும், தான் கையெப்பம் போட முடியாது எனவும் கூறி ஜோதி சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமகிருஷ்ணன் அருகில் இருந்த சுத்தியலால் ஜோதியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகியுள்ளார்.

இரவு முழுவதும் இரத்த வெள்ளத்தில் கிடந்த ஜோதியை மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜோதி உயிரிழந்துவிட்டார். மேலும், தலைமறைவாக இருந்த ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனனர்.