
திருமணமாகி கைக்குழந்தையுடன் இருக்கும் காதல் மனைவிக்கு நேர்ந்த கொடுமை!.
ஆம்பூர் மாவட்டத்தில் நந்தினி, ஞானமூர்த்தி ஆகிய இருவரும் காதலித்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஞானமூர்த்தி அடிக்கடி குடித்துவிட்டு வந்து நந்தினியிடம் பிரச்சனை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்,
நேற்று முன்தினம் வழக்கம்போல குடித்துவிட்டு வந்து தனது மனைவியுடன் பிரச்சனை செய்துள்ளார். தகராறின்போது வீட்டில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளார். மேலும் அவர், நந்தினியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த நந்தினி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அடித்து கொலை செய்ததை மறைப்பதற்காக மனைவியின் கழுத்தில் சேலையை மாட்டி தூக்கில் தொங்கவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார் ஞானமூர்த்தி. தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டு பொருட்கள் உடையும் சத்தம் கேட்டு சிறிது நேரத்தில் எதுவும் நடமாட்டம் இல்லாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.
அப்போது நந்தினியின் சடலம் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்தனர். புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், நந்தினியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின்னர் தப்பியோடிய ஞானமூர்த்தியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement