10 முறை கர்ப்பத்தின் போதும் கணவன் செய்த செயல், மீண்டும் கர்ப்பமான நிலையில் பெரும் பரபரப்பு.!husband done delievery to wife

 கூலித்தொழிலாளி ஒருவர் தனது மனைவிக்கு வீட்டிலேயே 10 முறை பிரசவம் பார்த்துள்ள நிலையில் 11வது குழந்தை பிறக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சாந்தி. 45 வயது நிறைந்த இவர்களுக்கு 11 குழந்தைகள் பிறந்தன. இதில் மூன்றாவது பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

மேலும் மனைவியின் ஒவ்வொரு பிரசவத்தையும் மருத்துவமனைக்கு செல்லாமல், யார் துணையும் இல்லாமல் கண்ணனே தனது வீட்டிலேயே  பார்த்து வந்துள்ளார். இதில், தற்போது 8 குழந்தைகள் உயிரோடு நலமுடன் உள்ளனர்.மேலும் இதில் பலருக்கு திருமணமாகி கண்ணன் மற்றும் சாந்தி தம்பதியினருக்கு 4 பேரக்குழந்தைகள் உள்ளனர்.

delievery

இந்நிலையில் சாந்தி 11வது மீண்டும்  மீண்டும் கர்ப்பமுற்றார். இதையறிந்த அப்பகுதி சுகாதார செவிலியர்கள் சாந்தியை மருத்துவமனைக்கு வருமாறு பலமுறை அழைத்தும் வர மறுத்துள்ளார். மேலும் தன் வீட்டிலேயே கணவர் மூலம் பிரசவம் பார்த்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சாந்தியை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில், அவருக்கு சோதனை செய்ததில் ரத்தசோகை இருப்பது தெரியவந்தது.

தற்போது, அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.