புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
2 மனைவிகளும் கைவிட்டு சென்றதால் சோகம்.. கயிற்றால் இறுதி முடிவை தேடிய கணவன்.. கண்ணீர் பரிதாபம்.!
தனது இரண்டு மனைவிகளும் பிரிந்து சென்றதால், மனவிரக்தியடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் மாணிக்கம். இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது.
முதல் மனைவிக்கு குழந்தை இல்லாத காரணத்தால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவர் மாணிக்கத்தை பிரிந்து சென்ற நிலையில், இரண்டாவது முறையாக இவர் திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக கருத்துவேறுபாடு காரணத்தால், இரண்டாவது மனைவியும் இவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் தனிமையில் புழுங்கி மாணிக்கம் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார்.
மேலும், விரக்தியை தாங்க முடியாமல் மனமுடைந்து நேற்று வீட்டில் இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.