மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்து விட்டு விரக்தியில் கணவர் தூக்கிட்டு தற்கொலை... நெல்லையில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்து விட்டு விரக்தியில் கணவர் தூக்கிட்டு தற்கொலை... நெல்லையில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!


Husband committed suicide after stabbing wife's boy friend

நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் குடும்பத்தை விட்டு விட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த சமயத்தில் செந்திலின் நண்பரான கிருபாகரன் என்ற நபர் செந்திலின் மனைவிக்கு உதவிகளை செய்து வந்துள்ளார்.

இதில் செந்திலின் மனைவிக்கும் கிருபாகரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இச்செய்தி செந்திலின் காதிற்கு எட்டவே செந்தில் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கோபமான செந்திலின் மனைவி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு கன்னியாகுமரியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். 

nellai

இதனால் மன வேதனையில் இருந்த செந்தில் இவை அனைத்திற்கும் கிருபாகரன் தான் காரணம் என கூறி கிருபாகரனை கத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் தான் தாக்கியதில் கிருபாகரன் இறந்து விட்டதாக நினைத்து செந்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.