தமிழகம்

மனைவியை தாக்கிய மின்சாரம்! துடிதுடித்த மனைவியை காப்பாற்றச் சென்ற கணவன்! குடும்பத்தினருக்கு முன்பே நடந்த சோகம்!

Summary:

husband and wife did in electric shock

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாரானூர் என்ற கிராமத்தில் மகேந்திரன் மற்றும் இவரது மனைவி சந்தியா என்ற தம்பதியினர் வசித்துவந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சந்தியா வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது, மின்சாரம் செல்லும் எர்த் ஒயரில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது.

அதனை அறியாத சந்தியா அந்த எர்த் ஒயர் மீது கால் வைத்துள்ளார். இதனால் அவர் மீது மின்சாரம் தாக்கி அலறி துடிதுடித்துள்ளார் சந்தியா. மனைவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து மனைவியை காப்பற்ற சென்ற மகேந்திரன் மீதும் மின்சாரம் தாக்கியது.

இருவரும் துடித்துக்கொண்டிருப்பதை பார்த்த மகேந்திரனின் அண்ணன் சக்திவேல் இருவரையும் காப்பாற்ற சென்றுள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் சக்திவேலை மீட்டனர். ஆனால் சந்தியா மற்றும் மகேந்திரன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதில் படுகாயம் அடைந்த சக்திவேலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement